Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 20, 2022

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!




2021-22ம் கல்வியாண்டிற்கு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக ஆணை வெளியிடப்பட்டு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காண் அரசாணையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் ( EMIS Online ) பதிவேற்றம் செய்துள்ளனர். அதனடிப்படையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாறுதல் விண்ணப்பங்களை பதவி வாரியாக , பாடவாரியாக முன்னுரிமைப் பட்டியல் தற்போது ( Seniority List ) EMIS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாறுதல் முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் 21.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் EMIS Online- வழியே உரிய விவரங்களை தெரிவித்திட சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ( மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் ) அறிவுறுத்தப்படுகிறது.

கல்வி அலுவலர்களும் தங்கள் மேலும் முதன்மைக் EM1S Login ID ஐ பயன்படுத்தி அலுவலகத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்காண் மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலில் ( பதவி வாரியாக & பாடவாரியாக ) உள்ள அனைத்து விவரங்களும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திடவும் இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் இருப்பின் அதனை உடனடியாக EMIS அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரியனவற்றை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

அதனடிப்படையில் உரிய திருத்தங்கள் / முறையீடுகள் ஆகியனவை மேற்கொள்ளப்பட்டு இறுதி முன்னுரிமைப் பட்டியல் ( Final Seniority List ) 22.01.2022 EMIS இணையதள வாயிலாக வெளியிடப்படும். இறுதி முன்னுரிமைப் பட்டியல் முறையீடுகள் ஏதும் இருப்பின் பிறகு திருத்தங்கள் வெளியிடப்பட்ட ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேலும் இதன் தொடர்ச்சியாக 24.01.2022 முதல் ஒவ்வொரு பதவி வாரியாக ஏற்கனவே அறிவித்துள்ள அட்டவணையின் அடிப்படையில் மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வுகள் நடைபெறும் . கலந்தாய்வுகள் நடைபெறும் அன்றைய நாளில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நல்லமுறையில் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment