Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 1, 2021

9th TAMIL புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 5

மதிப்பீட்டுச் செயல்பாடு

1. பொருத்தமான ஆகுபெயர்ச் சொல்லைக் கொண்டு நிரப்புக.

இந்தியா வென்றது (பூனை, இந்தியா)

டிசம்பர் பூத்தது (டிசம்பர்,பூ)

மல்லிகை சூடினாள் (மலர் , மல்லிகை)

ஊர் சிரித்தது (ஊர், குழந்தை )

வெள்ளை அடித்தான் (சுண்ணாம்பு,வெள்ளை )

தை பொங்கியது (பால் ,தை)

சித்திரை அடித்தது (சித்திரை,வெயில்)

வறுவல் தின்றான் (வறுவல்,முறுக்கு)

வெற்றிலை நட்டான் (வெற்றிலை , மரம்)

இனிப்பு  சாப்பிட்டேன் (உணவு,இனிப்பு)

2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஆகுபெயரைக் கண்டறிந்து அதன் வகையைக் குறிப்பிடுக.

            பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தன் எழுச்சி உரை மூலம் மாணவர்கள் அனைவருக்கும் தேசப்பற்றினை ஊட்டினார் . அடிமைத் தளையிலிருந்து மீண்ட இந்தியாவின் வீரத்தை மாணவர்கள் நெஞ்சில் நிறுத்தினர். விழாவின் முடிவில் ஆசிரியர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாமேடை மகிழ்ச்சியில் துள்ளியது. விழா முடிந்ததும் அவரவர் கால்கள் ஓடின. வீட்டில் அம்மா வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார். நானும் வெள்ளை அடிப்பேன் என்று
குழந்தை அடம்பிடித்தான்.குழந்தைக்கு அம்மாவறுவல் கொடுத்து அவனது எண்ணத்தை மாற்றினாள்.

இந்தியாவின் வீரத்தை - இடவாகு பெயர் 

இனிப்பு வழங்கினார் - தொழிலாகு பெயர்

கால்கள் ஓடின - சினையாகு பெயர்

வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்  - பண்பாகு பெயர்

வறுவல் கொடுத்து  - தொழிலாகு பெயர் 

No comments:

Post a Comment