மதிப்பீட்டுச் செயல்பாடு
உரையாடலை நிறைவுசெய்க.
(சூழல்: வகுப்பறை- தமிழ்ப் பாடவேளை)
மாணவர்கள் : வணக்கம் அம்மா!
ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே! மித்திரன் கையில் ஏதோ வைத்துள்ளாய்.
என்ன அது?
மித்திரன் : அம்மா! இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இன்று எனக்குப் பிறந்தநாள்.
ஆசிரியர் : அப்படியா! மகிழ்ச்சி! அனைவரும் மித்திரனுக்கு கைதட்டிப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள்.
மாணவர்கள் : பிறந்தநாள் வாழ்த்துகள் மித்திரன்!
மித்திரன் : நன்றி அம்மா!நன்றி நண்பர்களே!
ஆசிரியர் : வாழ்த்துகள் மித்திரன்! இந்தப் பிறந்தநாளில் ஏதேனும் சிறப்பு உண்டா?
மித்திரன் : நான் இன்றுமுதல் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப் போகிறேன், அம்மா!
ஆசிரியர் : அப்படியா!அது என்ன உறுதிமொழி?
மித்திரன் : என் பிறந்த நாளில் இனி ஆண்டுதோறும் ஐந்து மரக்கன்றுகள் நடுவேன் அம்மா
ஆசிரியர் : அப்படியா மிக்க மகிழ்ச்சி. நல்ல உறுதிமொழி.
மித்திரன் : மிக்க நன்றி அம்மா
5. உரையாடலை நிறைவுசெய்க.
கலைமகள் : வணக்கம் அத்தை!
மங்களம் : வணக்கம் கலை! உள்ளே வா. உட்கார். என்ன வேண்டும்?
கலைமகள் : எங்கள் பள்ளியில் கற்றலில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சில
செயல்பாடுகள் வழங்கி உள்ளார்கள். அவற்றுள் எனக்குக் கொடுக்கப்பட்ட செயல்பாடு- தகவல்கள் சேகரித்தல் அத்தை!
மங்களம் : அப்படியா, நல்லது. என்ன தகவல் வேண்டும்? கேள். சொல்கிறேன்.
கலைமகள் : அத்தை, உங்கள் குடும்பத்தைச் சார்ந்து நான் கேட்கும் விவரங்களை நீங்கள் எனக்குச் சொல்வீர்களா?
மங்களம் : ம்.. உறுதியாக, கேள் கலை!
கலைமகள் : உங்கள் வீட்டில் மொத்தம் எத்தனை பெரியவர்கள் உள்ளனர் ?
மங்களம் : 5 பெரியவர்கள் உள்ளனர்.
கலைமகள் : யாரெல்லாம் கொரனா தடுப்பூசி போட்டுள்ளீர்கள் ?
மங்களம் : அனைவருமே போட்டுள்ளோம்.
கலைமகள் : அப்படியா அத்தை ? விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள். வாழ்த்துகள் அத்தை.
மங்களம் : நன்றி கலைமகள்
No comments:
Post a Comment