மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
வருமுன் காப்போம்!
மட்டுக் குணவை உண்ணாமல்
வாரி வாரித் தின்பாயேல்
திட்டு முட்டுப் பட்டிடுவாய்!
தினமும் பாயில் விழுந்திடுவாய்!
தூய காற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
நோயை ஓட்டி விடும் அப்பா!
நூறு வயதும் தரும் அப்பா!
அருமை உடலின் நலமெல்லாம்
அடையும் வழிகள் அறிவாயே!
வருமுன் நோயைக் காப்பாயே!
வையம் புகழ வாழ்வாயே!
- கவிமணி தேசிக விநாயகனார்.
வினாக்கள்
1 ) பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனை, இயைபுச் சொற்களைக் கண்டறிந்து அட்டவணையை நிரப்புக.
மோனை :
* திட்டு
* தினமும்
* அருமை
* அடையும்
எதுகை
* திட்டு
* முட்டுப்
*அருமை
* வருமுன்
இயைபு
* பட்டிடுவாய்
* விழுந்திடுவாய்
* அறிவாயை
* காப்பாயே
* வாழ்வாயே
2 ) " வருமுன் நோயைக் காப்பாயே"-இக்கூற்று யாருடையது?
பாடலின் ஆசிரியரான கவிமணி தேசிக விநாயகனாரின் கூற்று.
3. கீழ்க்காணும் சொற்களுக்கு அகராதியைப் பயன்படுத்திப் பொருள் காண்க.
அ) மட்டு - அளவு
ஆ) வையம் - உலகம்
4. விடுபட்ட சொல்லை நிரப்புக.
தூயகாற்றும் நன்னீரும்
சுண்டப் பசித்த பின்உணவும்
No comments:
Post a Comment