மதிப்பீடு
1. வேர்ச்சொல் என்றால் என்ன ?
- பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும் .
- சான்று - நட
2. வேர்ச்சொல்லின் முக்கியத்துவம் என்ன ?
சொற்கள் தோன்றுவதற்கும் , பொருள் புரிவதற்கும் வேர்ச்சொல்லே அடிப்படை ஆகும்.
3. பெயரெச்சம் என்றால் என்ன?
- பெயரைக் கொண்டு முடியும் சொல் பெயரெச்சம் எனப்படும்.
- "வந்த கண்ணன்"
- இதில் வந்த என்ற எச்சச்சொல் கண்ணன் என்ற பெயரைக் கொண்டு முடிவதால் இது பெயரெச்சம் எனப்படும்.
4. வேர்ச்சொல் எப்படி வினைமுற்றுகளாக மாற்றமடைகின்றது என்பதை விளக்குக.
- வினைமுற்று :
- ஒரு செயல் முடிவதை சுட்டுவது வினைமுற்று ஆகும்.
- நடி - நடித்தான்
- செல் - சென்றான்
- இப்படி வேர்ச்சொல் வினையைக் கொண்டு முடிந்தால் வினைமுற்று ஆகும்
No comments:
Post a Comment