1.
ஒரு அணியின் வரிசை 3X4 எனில் அவ்வணியில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை?
2.
கமல் தனது வகுப்பறையில் ஒரு முனையில் இருந்து 30 வது மாணவனாகவும், மற்றொரு முனையில் இருந்து 24 வது மாணவனாகவும் அமர்ந்து இருந்தால் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?
3.
ஒரு மாநகரத்தில் உள்ள 150 வீடுகளில, 40 வீடுகளில் கணினி இருக்கின்றது. 140 வீடுகளில் தொலைகாட்சி இருக்கின்றது. எத்தனை வீடுகளில் இரண்டும் இருக்கின்றன?
4.
முதல் இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணைவிட, முறையே 45%,35%, குறைவாக உள்ளன. இரண்டாவது எண் முதல் எண்ணைவிட எத்தனை சதவீதம் குறைவாக உள்ளது?
5.
ஒரு தேர்வில் மொத்த மாணவர்கள் 75 % ஆங்கிலத்திலும், 65 % கணிதத்திலும் தேர்ச்சி பெற்றனர். 15 % மாணவர்கள் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை. இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 495 மாணவர்கள் எனில், மொத்த மாணவர்கள்
6.
ஒரு புத்தக வெளியீட்டாளர் குறித்த விலையில் 20% தள்ளுபடி அளித்தால் அவருக்கு 25% லாபம் கிடைக்கும். அவர் தள்ளுபடியை குறைத்து 15% ஆக்கினால், அவருக்குக் கிடைக்கும் லாபம்?
7.
ஒருவர் ரூ.600 குறித்த விலையில் உள்ள ஒரு மின்விசிறியை வாங்கினார். அவர் தொடர்ச்சியாக 10%, 20%, தள்ளுபடி பெறுகிறார். அவர் அதனை ரூ. 540 க்கு விற்றால் அவருக்கு கிடைக்கும் லாபம் அல்லது நஷ்டம் எவ்வளவு?
8.
ஒரு பழக்கூடையை ரூ. 360 க்கு விற்றதில் 20 % லாபம் கிடைத்தால் அதன் அடக்கவிலை?
9.
ஒரு புத்தகத்தின் அடக்க விலைக்கு மேல் 25% லாபம் வைத்திருந்தார். தனது வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி அளித்தால், அவருக்கு கிடைக்கும் லாபம்?
10.
வியாபாரி ஒருவர் 2 பசுக்களை ஒவ்வொன்றும் ரூ. 770 க்கு விற்கிறார் என்றால் ஒன்றுக்கு 10% லாபமும் மற்றும் ஒன்றுக்கு 10% நஷ்டம் ஏற்பட்டால் சராசரி லாபம் அல்லது நஷ்டத்தின் சதவிகிதம்?
No comments:
Post a Comment