Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 27, 2021

TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம்

திருக்குறள்
இலக்கியம் பாடத்தொகுப்பு:
·         திருக்குறள் – திரு + குறள்
·         இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
·         திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார்.
·         திருக்குறள் முப்பால்களை கொண்டதுஅவை அறத்துப்பால்பொருட்பால்காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
·         திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 குறள்களையும் கொண்டது.
·         திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைத்துள்ளனதிருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
·         உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள்இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
·         உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்நூற்றெழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
·         ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ இதில் நாலு என்பது நாலடியாரையும்இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
·         மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

சிறப்புப் பெயர்கள்:
1.   உலகப் பொதுமறை
2.   முப்பால்
3.   வாயுறை வாழ்த்து
4.   பொதுமறை
5.   பொய்யாமொழி
6.   தெய்வநூல்
7.   தமிழ்மறை
8.   முதுமொழி
9.   உத்தரவேதம்
10.         திருவள்ளுவம்
·         திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமை குறித்துச் சான்றோர் பலர் பாடிய பாக்களின் தொகுப்பாகும்.
·         திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
·         அறத்துப்பாலில் – 38 அதிகாரங்கள்பொருட்பாலில் – 70 அதிகாரங்கள்இன்பத்துப்பாலில் – 25 அதிகாரங்கள் உள்ளன.
·         விக்டோரியா மகாராணிகாலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்.
·         திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்தருமர்தாமத்தர்பரிதிதிருமலையர்பரிப்பெருமாள்மணக்குதவர்நச்சர்பரிமேலழகர்மல்லர்காளிங்கர்.
·         திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் – வீரமா முனிவர்ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

திருவள்ளுவர்:


·         திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்இவரது காலம் கி.மு.31 என்று கூறுவர்இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
·         இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லைஇவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி.
·         திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார்தெய்வப் புலவர்நாயனார்முதற்பாவலர்நான்முகனார்மாதானுபாங்கிபெருநாவலர்பொய்யில் புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.
·          31 – 2043 (கி.பி. 2013 திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.)+கிறிஸ்து ஆண்டு (கி.பி.) 31 – திருவள்ளுவர் ஆண்டு.கா: 2013
·         திருக்குறளின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும்ஜி.யு.போப் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர்.
·         இந்நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
·         திருவள்ளுவமாலை என்னும் நூல் இதன் பெருமைக்கும்ää சிறப்புக்கம் சான்றாக திகழ்கிறது.
·         உருசிய நாட்டில் அணு துளைக்காத கிhரம்ளின் மாளிகையில் உள் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
·         இங்கிலாந்து நாட்டுக் காட்சிச் சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்றும் ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
·         மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812ல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
·         திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
·         திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
·         ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
·         அதிகாரங்கள் 133 இதன் கூட்டுத்தொகை ஏழு.
·         மொத்த குறட்பாக்கள் இதன் கூட்டுத் தொகையும் ஏழு.

திருவள்ளுவமாலை:

ஆசிரியர் குறிப்பு:
·         பெயர் – கபிலர்
·         காலம் – கி.பிஇரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவரென்றும்ää சங்க காலத்திற்கு பின் வாழ்ந்தவர் என்றும் கூறுவர்.
நூல் குறிப்பு:–
·         திருக்குறளின் சிறப்பினை உணர்த்த திருவள்ளுவமாலை என்னும் நூல் எழுந்தது.
·         இந்நூலில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன.
·         ஐம்பத்துமூன்று புலவர்கள் பாடியுள்ளனர்.
·         திருவள்ளுவ மாலை “திணையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்டபனையளவு காட்டும் படித்தால்; – மனையளகு வள்ளைக்(குஉறங்கும் வளநாடவள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி”.கபிலர்
பத்தொன்பது அதிகாரங்கள்
1.   அன்புடைமை
2.   பண்புடைமை
3.   கல்வி
4.   கேள்வி
5.   அறிவு
6.   அடக்கம்
7.   ஒழுக்கம்
8.   பொறையுடைமை
9.   நட்பு
10.         வாய்மை
11.         காலம்
12.         வலி
13.         ஒப்புரவறிதல்
14.         செய்ந்நன்றி அறிதல்
15.         சான்றாமை
16.         பெரியரைத் துணைக்கோடல்
17.         பொருள் செயல்வகை
18.         வினைத்திட்பம்
19.         இனியவை கூறல்

No comments:

Post a Comment