v சங்க காலத்தில் தமிழில் தோன்றிய நூல்கள் சங்க இலக்கியங்கள் ஆகும்.
சங்க இலக்கியங்கள்: {பதினெண் மேல்கணக்கு நூல்கள்}
1.எட்டுத்தொகை (எட்டு நூல்கள்)
2.பத்துப்பாட்டு (பத்து நூல்கள்)
பதினெண் = பதினெட்டு |
எட்டுத்தொகை:
1.நற்றிணை 5.பரிபாடல்
2.குறுந்தொகை 6.கலித்தொகை
3.ஐங்குறுநூறு 7.அகநானூறு
4.பதிற்றுப்பத்து 8.புறநானூறு
நற்றிணை:
1. இது ஒரு அகத்திணை நூல்.
2. இதன் அடி வரையறை 9-12 அடியாகும்.
3. இதனை தொகுப்பித்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி ஆகும்.
4. நற்றிணையில் மொத்தம் 400+1 பாடல்கள் .
5. பாடியவர்கள் மொத்தம் 187 பேர்.
6. தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
குறுந்தொகை:
1. இது ஒரு அகப்பொருள் நூல் ஆகும்.
2. இதில் 400+1 பாடல்கள் உள்ளன.
3. இப்பாடல்கள் 203 புலவர்களால் பாடப்பட்டது.
4. இதன் அடி வரையறை 4-8 அடியாகும்.
5. இதனைத் தொகுத்தவர் பூரிக்கோ.
6. தொகுப்பித்தவர் தெரியவில்லை.
ஐங்குறுநூறு:
1. இது ஒரு அகப்பொருள் நூலாகும்.
2. இதில் 500+1 பாடல்கள் உள்ளன.
3. இதன் அடிவரையறை 3-5 அடிகள்.
4. இதில் ஐந்து திணைகள் பாடப்படுகின்றன.
5. ஒவ்வொரு திணையிலும் 100 பாடல்கள்.
6. இந்நூலை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.
7. தொகுப்பித்தவர் சேர மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆவார்.
8. ஐந்குறுநூரின் கடவுள்வாழ்த்து பாடல் பெருந்தேவனாரால் பாடப்பட்டது.
ஐந்திணைகள்:
1. குறிஞ்சித்திணை – கபிலர்
2. முல்லைத்திணை – பேயனார்
3. மருதத்திணை - ஓரம்போகியார்
4. நெய்தல் திணை – அம்மூவனார்
5. பாலைத்திணை - ஓதலாந்தையார்
பதிற்றுப்பத்து:
1. பதிற்றுப்பத்து அகவற்பாவினால் அமைந்த பத்து பகுதிகளைக்கொண்ட நூல்.
2. ஒவ்வொரு பத்தும் வெவ்வேறு புலவர்களால் எழுதப்பட்டது.
3. நூலின் முதல் பத்து மற்றும் கடைசி பத்து கிடைக்கவில்லை.
4. தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் தெரியவில்லை.
5. இதில் மொத்தம் 100 பாடல்கள். (80 மட்டுமே கிடைத்துள்ளன)
பரிபாடல்:
1. பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பட்டதால் பரிபாடல் எனப்படுகிறது.
2. 70 பாடல்களில் 22 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன.
3. இதற்க்கு பரிமேலழகர் உரை எழுதினார்.
கலித்தொகை:
1. 150 கலிப்பாக்களைக்கொண்டது.
2. ஒவ்வொரு திணை பற்றியும் ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர்.
3. இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
4. உரை எழுதியவர் நச்சினிக்கினியார்.
5. ஐந்திணைகள்:
1. பாலைத்திணை - பெருங்கடுங்கோ
2. குறிஞ்சித்திணை – கபிலர்
3. மருததிணை - மதுரை மருதனிள நாகனார்
4. முல்லைத்திணை – சோழன் நலுருத்திரன்
5. நெய்தல் திணை - நல்லத்துவனார்
அகநானூறு:
1. இது ஒரு அகப்பொருள் நூல் ஆகும்.
2. 400 பாடல்களைக்கொண்டது.
3. இதற்க்கு நெடுந்தொகை என்ற பெயரும் உண்டு.
4. அகநாநூற்றுப்பாடல்களை பாடியோர் எண்ணிக்கை 146 பேர் ஆகும்.
5. இந்நூலின் முதல் 90பாடல்களுக்கு மட்டும் பழைய உரை உள்ளது.
6. முழுமையாக நாவலர் வேங்கடசாமி நாட்டாரும், கரந்தை கவியரசு வெங்கடாசலம் பிள்ளையும் உரை எழுதியுள்ளனர்.
7. தொகுத்தவர் மதுரை உப்புரிகுடி கிழார் மகனார் உரித்திரசன்மன்.
8. தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி.
9. அகநானூற்றின் அடி வரையறை 13-31 அடி.
10. அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது,
1. களிற்றியானை நிரை - 120 பாடல்
2. மணிமிடை பவளம் - 180 பாடல்
3. நித்திலக்கோவை - 100 பாடல்
புறநானூறு:
1. இந்நூல் புறப்பொருள் நூலாகும்.
2. எனவே இதற்க்கு புறப்பாட்டு என்று மற்றொரு பெயரும் உண்டு.
3. தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
4. இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன.
5. புறநாநூற்றில் புறத்திணைகள் 11.
6. புறநானூற்றின் துறைகள் 65.
7. இதனை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பத்துப்பாட்டு:
1. திருமுருகாற்றுப்படை 6. மதுரைக்காஞ்சி
2. பொருநர் ஆற்றுப்படை 7. நெடுநல்வாடை
3. சிறுபாணாற்றுப்படை 8. குறிஞ்சிப்பாட்டு
4. பெரும்பாணாற்றுப்படை 9. பட்டினப்பாலை
5. முல்லைப்பாட்டு 10. மலைபடுகடாம்
1.திருமுருகாற்றுப்படை:
ஆசிரியர்: மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர்
பாடப்பட்டவன்: முருகப்பெருமான்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 317
2.பொருநர் ஆற்றுப்படை:
ஆசிரியர்: முடத்தாமக்கண்ணியார்
பாடப்பட்டவன்: சோழன் கரிகாலன் பெருவளத்தான்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 248
3.சிறுபாணாற்றுப்படை:
ஆசிரியர்: இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தனர்
பாடப்பட்டவன்: ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 269
4.பெரும்பாணாற்றுப்படை:
ஆசிரியர்: கடியலூர் உரித்திரங்கன்னனார்
பாடப்பட்டவன்: தொண்டைமான் இளந்திரையன்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 500
5.முல்லைப்பாட்டு:
ஆசிரியர்: நப்பூதனார்
திணை : முல்லைத்திணை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 103
இது அகப்பொருள் பற்றியது.
6.மதுரைக்காஞ்சி:
ஆசிரியர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன்
திணை : காஞ்சித்திணை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 782
7.நெடுநல்வாடை:
ஆசிரியர்: மதுரைக்கனக்காயனார் மகன் நக்கீரர்
திணை : வாகைத்திணை
துறை : கூதிர்பாசறை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 188
இது அகத்தினையைச் சார்ந்தது.
8.குறிஞ்சிப்பாட்டு:
ஆசிரியர்: கபிலர்
திணை : குறிஞ்சித்திணை
துறை : அறத்தோடு நிற்றல்
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 261
9.பட்டினப்பாலை:
ஆசிரியர்: கடியலூர் உரித்திரங்கன்னனார்
பாடப்பட்டவன்: திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை : பாலைத்திணை
துறை : செலவழுங்குதல்
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 301
10.மலைபடுகடாம்:
ஆசிரியர்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
பாடப்பட்டவன்: நன்னன் வேண்மான்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடி : 583
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
1. அறம்,பொருள்,இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிக்கு மிகாத செய்யுளால் அடுக்கிசொல்லுதல் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பு.
2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் வெண்பாக்களால் ஆனது.
3. இவை நீதி நூல்கள், அகப்பொருள் நூல்கள், புறப்பொருள் நூல் என மூன்று பிரிவாக உள்ளது.
4. நீதி நூல்கள் பதினொன்று, அகப்பொருள் நூல்கள் ஆறு, புறப்பொருள் நூல் ஒன்று மொத்தம் பதினெட்டு நூல்கள்.
நீதிநூல்கள்:
1. நாலடியார் 7. ஏலாதி
2. நாண்மணிக்கடிகை 8. சிறுபஞ்சமூலம்
3. இனியவை நாற்ப்பது 9. ஆசாரக்கோவை
4. இன்னா நாற்ப்பது 10. பழமொழி நானூறு
5. திரிகடுகம் 11. முதுமொழிக்காஞ்சி
6. திருக்குறள்
புறப்பொருள் நூல்:
1. களவழி நாற்ப்பது
அகப்பொருள் நூல்கள்:
1. ஐந்திணை ஐம்பது
2. ஐந்திணை எழுபது
3. திணைமொழி ஐம்பது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கார் நாற்பது
6. கைந்நிலை
1.நாலடியார்:
ஆசிரியர்: சமண முனிவர்கள் பலர்
பாடல்கள்: 400 பாடல்கள்
அதிகாரம்: 40
இயல்: 12
அடி : ஒவ்வொரு பாடலும் 4 அடி
சிறப்புப்பெயர்: நாலடி நானூறு, வேளாண் வேதம், குட்டித்திருக்குறள்.
1. இந்நூல் கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
2. இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார்.
3. ஜி.யு.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
நாலடியார் சிறப்பினைக்கூரும் தொடர்கள்:
“ நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி”
“பழகுதமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”.
நான்மணிக்கடிகை:
ஆசிரியர்: விளம்பி நாகனார்
பாடல்: 104
1. நான்மணிக்கடிகை என்றால் நான்கு மணியான அறக்கருத்துக்களை கூறும் நூல் என்று பொருள்.
2. ஒவ்வொரு பாடலும் நான்கு மணியான கருத்துக்களை கூறுகிறது.
3. இதில் உள்ள இரண்டு பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
திரிகடுகம்:
ஆசிரியர்: நல்லாதனார்
1. இவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
2. இவரைச் “செரு அடுதோள் நல்லாதன்” என்று பாயிரம் குறிப்பிடுகிறது.
3. எனவே இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது.
4. திரிகடுகம் 100 வெண்பாக்களை உடையது.
5. ஒவ்வொரு பாடலும் மூன்று அறக்கருத்துக்களை உணர்த்தும்.
6. சுக்கு,மிளகு,திப்பிலி, போன்றவற்றால் ஆன மருந்துப்பொருளுக்கு திரிகடுகம் என்று பெயர்.
7. எனவே இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.
திருக்குறள்:
ஆசிரியர்: திருவள்ளுவர்
பாடல் : 1330 பாடல்கள்
அதிகாரம்: 133
திருக்குறளில் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. அவை,
1. அறத்துப்பால் (38அதிகாரம்)
2. பொருட்பால் (70அதிகாரம்)
3. இன்பத்துப்பால் (25அதிகாரம்)
திருக்குறளின் இயல்கள் மொத்தம் ஒன்பது. அவை,
அறத்துப்பால்:
Ø பாயிரவியல்
Ø இல்லறவியல்
Ø துறவறவியல்
பொருட்பால்:
Ø அரசு இயல்
Ø அமைச்சு இயல்
Ø ஒழிபு இயல்
இன்பத்துப்பால்:
Ø களவியல்
Ø கற்பியல்
1. ஒவ்வொருஅதிகாரத்திர்க்கும் பத்து பாடல்கள் வீதம் 1330 பாடல்கள் உள்ளன.
2. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
3. திருக்குறள் தமிழ் மொழியிலுள்ள அற நூல்களில் முதன்மையானது ஆகும்.
4. உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் இது “உலகப்பொதுமறை” என்று வழங்கப்படுகிறது.
5. ஒவ்வொரு பாடலும் இரண்டு அடிகளைக்கொண்டுள்ளது
6. திருக்குறளுக்கு பல பேர் உரை எழுதயுள்ளனர். அதில் பரிமேலழகர் உரையே சிறப்பாக கருதப்படுகிறது
.திருக்குறளின் வேறு பெயர்கள்:
முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, பொதுமறை,.
திருக்குறளின் பெருமைகள்:
1. திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் திருவள்ளுவமாலை
2. திருக்குறள் 107 உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது
3. வீரமாமுனிவர் இலத்தீனில் மொழிபெயர்ப்பு செய்தார்.
4. ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார்.
5. உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பு திருக்குறளுக்கு உண்டு.
6. உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப்பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
7. இங்கிலாந்து நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது..
திருவள்ளுவர்:
திருவள்ளுவரை பற்றி விரிவான தகவல்கள் இல்லை. இவர் வாழ்ந்த காலம் கி.மு 31 என்று வரையறுக்கப்படுகிறது.
வள்ளுவரின் வேறு பெயர்கள்:
முதற்பாவலர், பொய்யில்புலவர், பெருநாவலர், செந்நாப்போதார், தெய்வப்புலவர், மாதானுபங்கி, போன்ற பல பெயர்கள் உள்ளன.
திருவள்ளுவரின் சிறப்பை உணர்த்தும் வரிகள்:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
-பாரதியார்
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”
– பாரதிதாசன்
பழமொழி நானூறு:
அரையன் –அரசனைக்குறிக்கும் |
மூன்றுரை – ஊர்ப்பெயர் |
ஆசிரியர்: மூன்றுரை அரையனார்
சமயம்: சமண சமயம்.
காலம்: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
பாடல்கள்: 400
அதிகாரம்: 34
1. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு இலக்கிய பழமொழி உள்ளது.
2. எனவே இது பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.
3. தொல்காப்பியர் இதனை முதுசொல் என்று அழைக்கிறார்.
4. இதற்க்கு முதுமொழி என்ற மற்றொரு பெயரும் உண்டு.
5. திருக்குறள், நாலடியாருக்கு அடுத்த புகழ் கொண்டது.
சிறுபஞ்சமூலம்:
ஆசிரியர்: காரியாசான்
சமயம்: சமண சமயம்.
1. காரியாசான் மதுரை மாக்காயனாரின் மாணவர்.
2. இவரும் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியரும் ஒரு சாலை மாணவர்கள்.
3. மருந்தால் பெயர் பெற்ற நூல் சிறுபஞ்சமூலம்.
4. இதில் 97 வெண்பாக்கள் உள்ளன.
5. ஐவகை வேர்கள்: கண்டங்கத்தரி,சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, சிறுநெருஞ்சி.
பஞ்சம்- ஐந்து , மூலம் – வேர் |
ஏலாதி:
ஆசிரியர்: கணிமேதாவியார்.
சமயம்: சமண சமயம்.
காலம்: கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு.
1. கணிமேதாவியார் திணைமாலை நூற்றைம்பது என்னும் மற்றொரு கீழ்க்கணக்கு நூலை எழுதியுள்ளார்.
2. ஏலாதி 81 வெண்பாக்களை கொண்டுள்ளது.
3. நான்கு அடிகளில் ஆறு அருங்கருத்துக்களை கூறுகிறது
4. இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
5. ஏழாம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையைக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றால் ஆன மருந்துப்பொருளுக்கு ஏலாதி என்று பெயர்.
இனியவை நாற்ப்பது:
ஆசிரியர்: பூதஞ்சேந்தனார் (மதுரை தமிழாசிரியர் மகன்.)
காலம்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
பாடல்கள்: 40 (கடவுள் வாழ்த்து சேர்த்து 41)
1. நன்மை தரும் இனிய கருத்துக்களை நாற்ப்பது பாடல்களில் தொகுதுரைப்பதால் “இனியவை நாற்ப்பது” என்று பெயர் பெற்றது.
2. இந்நூலின் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு அறக்கருதுக்களைக்கூறும்.
இன்னா நாற்ப்பது:
ஆசிரியர்: கபிலர்
பாடல் : 40 (கடவுள் வாழ்த்து சேர்த்து 41)
1. துன்பத்திற்கு காரணமானவற்றை பற்றி தொகுத்து கூறுகிறது.
முதுமொழிக்காஞ்சி:
ஆசிரியர்: கூடலூர் கிழார்
1. இதன் ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் ஒரு முதுமொழி இடம்பெற்றுள்ளதால் இதற்கு முதுமொழிக்காஞ்சி என்று பெயர்.
ஆசாரக்கோவை:
ஆசிரியர்: பெருவாயில் முள்ளியார்
காலம்: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
1. இந்நூல் 100 வெண்பாக்களைக்கொண்டது.
2. இந்நூல பொதுவான ஒழுக்கம் மற்றும் நாள் தோறும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம் பற்றி கூறுகிறது.
கார் நாற்ப்பது:
ஆசிரியர்: மதுரைக் கண்ணனார்
காலம்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
1. இந்நூல் முல்லைத்திணை பற்றிய அகப்பொருள் நூலாகும்.
2. கார் பருவத்தைப்பற்றி சிறப்பித்து கூறுவதால் இதற்க்கு கார் நாற்பது என்று பெயர்.
3. இதில் நாற்பது பாடல்கள் உள்ளன.
களவழி நாற்பது:
ஆசிரியர்: பொய்கையார்
காலம்: சங்ககாலம்
1. கீழ்க்கணக்கு நூல்களில் போர் பற்றிக் கூறும் ஒரே புறப்பொருள் நூல் களவழி நாற்பது ஆகும்.
2. இதன் நாற்பது வெண்பாக்களும் “களத்து” என்ற சொல்லால் முடிகின்றன.
ஐந்திணை ஐம்பது:
ஆசிரியர்: பொறையனார்
1. இதன் பாடல்கள் மொத்தம் 50.
2. ஒவ்வொரு தினைக்கும் 10 பாடல்கள் வீதம் ஐந்து தினைகளுக்கும் 50 பாடல்கள்.
3. இது ஒரு அகப்பொருள் நூல்.
4. இதன் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.
ஐந்திணை எழுபது:
ஆசிரியர்: மூவாதியார்
1. இதன் பாடல்கள் மொத்தம் 70.
2. ஒவ்வொரு தினைக்கும் 14 பாடல்கள்.
3. இது ஓர் அகப்பொருள் நூல்.
திணைமொழி ஐம்பது:
ஆசிரியர்: கண்ணன் சேந்தனார்
காலம்: கி.பி. ஆறாம் நூற்றாண்டு.
பாடல்கள்: 50
திணைமாலை நூற்றைம்பது:
ஆசிரியர்: கணிமேதாவியார்
காலம்; கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு.
பாடல்கள்: 150
1. ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள்.
2. இது ஒரு அகப்பொருள் நூல்.
கைந்நிலை:
ஆசிரியர்: புல்லங்காடனார்
பாடல் : 45
இது ஒரு அகப்பொருள் நூலாகும்.
கம்பராமாயணம்
ஆசிரியர்: கம்பர்
காலம்: 12 ம் நூற்றாண்டு
பிறந்த ஊர்: தேரழுந்தூர்( நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில்)
தந்தை: ஆதித்தன்
1. கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
2. இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்
3. இவர் செய்நன்றி மறவா மரபைச் சேர்ந்தவர்.
4. தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
5. ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.
கம்பர் எழுதிய வேறு நூல்கள்:
சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
கம்பரின் பெருமைகள்:
“கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்”
“விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
“கல்வியில் பெரியர் கம்பர்” என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை உணர்த்துபவை.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரை புகழ்ந்து பாடியுள்ளர்.
நூல்குறிப்பு:
1. இராமனது வரலாற்றைக் கூறும் நூல் ராமாயணம் எனப்பட்டது.
2. இராமயணத்தை வடமொழியில் எழுதியவர் “வால்மீகி” ஆவார்.
3. ராமாயணத்தை தழுவிக் கம்ம்பர் தமிழில் “கம்பராமாயணம்” இயற்றினார்.
4. கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப்பெயரிட்டார்.
5. கம்பராமாயணம் ஆறு காண்டங்களை உடையது.
அவை,
1. பாலகாண்டம்
2. அயோத்தி காண்டம்
3. ஆரண்ய காண்டம்
4. கிட்கிந்தா காண்டம்
5. சுந்தர காண்டம்
6. யுத்த கண்டம்.
Ø காண்டம் என்பது பெரும்பிரிவைக்குரிக்கும்.
Ø படலம் சிறுபிரிவைக்குரிக்கும்.
Ø இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்குக் கதி” என்பர்.
காப்பியங்கள்
Ø காப்பியங்கள் இருவகைப்படும். அவை,
1. ஐம்பெருங்காப்பியம்
2. ஐஞ்சிறுங்காப்பியம்
ஐம்பெருங்காப்பியம்:
1. சிலப்பதிகாரம்
2. மணிமேகலை
3. சீவகசிந்தாமணி
4. வளையாபதி
5. குண்டலகேசி
ஐஞ்சிறுங்காப்பியம்:
1. உதயகுமாரணகாவியம்
2. நாககுமாரகாவியம்
3. யசோதர காவியம்
4. சூளாமணி
5. நீலகேசி
சிலப்பதிகாரம்:
ஆசிரியர்: இளங்கோவடிகள்
பெற்றோர்: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்-நற்சோணை
தமையன்: சேரன் செங்குட்டுவன்
காலம்: கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
இவர் சமய வேறுபாடற்ற துறவி.
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர் போல், இளங்கோவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை” என்று இளங்கோவின் சிறப்பறிந்து பாரதியார் புகழ்ந்துள்ளார்.
நூற்குறிப்பு:
சிலம்பு
1. கண்ணகியின் சிலம்பால் விளைந்த கதையை முதன்மையாய்க் கொண்டமையால் சிலப்பதிகாரம் என்று பெயர்.
2. இது உரையிடை இட்ட பாட்டுடைச்செய்யுள் எனவும் வழங்கப்படும்.
3. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள் மூன்று, காதைகள் முப்பது.
அவை,
1. புகார்க்காண்டம் – 10காதைகள்
2. மதுரைக்காண்டம் – 13காதைகள்
3. வஞ்சிக்காண்டம் -7காதைகள்
சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்கள்:
முதற்க்காப்பியம்,முத்தமிழ்க்காப்பியம்,நாடகக்காப்பியம்,குடிமக்கள்காப்பியம்,ஒற்றுமைக்காப்பியம்.
“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமென்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்று பாரதியார் இந்நூலை போற்றுகின்றார்.
மணிமேகலை:
Ø மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று.
Ø மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன இரட்டைக்காப்பியங்கள்.
Ø மனிமேகலையின் துறவு வாழ்க்கையினைக் கூறுவதால் இதற்கு மனிமேகலைத் துறவு எனும் மற்றொரு பெயரும் உண்டு.
Ø இது பௌத்த மதத்தைச் சார்ந்தது.
Ø இதில் முப்பது காதைகள் உள்ளன.
Ø இதன் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
Ø சாத்தான் என்பது இவர் இயற்பெயர்.
Ø இவர் திருச்சியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
Ø கூலவாணிகம்(கூலம் – தானியம்)
Ø எனவே இவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனப்பட்டார்.
Ø இவரும் இளங்கோவடிகளும் சமகாலத்தவர்.
Ø இவர் கடைச் சங்க புலவர்களுள் ஒருவர்.
Ø தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூல் புலவன் என்று இளங்கோவடிகள் இவரைப் புகழ்கிறார்.
Ø இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
சீவக சிந்தாமணி:
Ø ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று சீவகசிந்தாமணி.
Ø இக்காப்பியத்தின் காவிய தலைவன் சீவகன்.
Ø எனவே சீவகசிந்தாமணி எனப்பட்டது.
Ø இந்நூலுக்கு மனநூல் என்னும் வேறொரு பெயரும் உண்டு.
Ø இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
Ø இவர் சோழ அரச குலத்தில் பிறந்தவர்.
Ø சமண சமயத்தை சேர்ந்தவர்.
Ø இவர் பாடிய மற்றொரு நூல் நரி விருத்தம்.
Ø இவர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு.
No comments:
Post a Comment