Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 11, 2021

8ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒப்படைப்பு வினாத்தாளுக்கான முழுமையான விடைகள்

இயல்-1

பகுதி - அ

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்.

1. சிந்துக்குத் தந்தை என்று புகழப்படுபவர் யார்?

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கம்பர்

ஈ) தொல்காப்பியர்

விடை :  அ )  பாரதியார் 

2. ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழியவே - இவ்வடிகளில் 'நிலப்பகுதி 'என்னும் பொருள் தரும் சொல் யாது?

அ) மணம்

ஆ) இசை

இ) கடல்

(ஈ) வைப்பு

விடை :  ஈ ) வைப்பு

3. உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் எவற்றின் சேர்க்கையால் உருவானவை?

அ) வேதிப் பொருள்கள்

ஆ) இயற்கை வளங்கள்

இ) ஐம்பூதங்கள்

ஈ) மனிதர்கள்

விடை : இ ) ஐம்பூதங்கள்

4. தொல்காப்பியத்தில் ஒவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளன?

அ) ஆறு

ஆ) எட்டு

இ) பத்து

ஈ) ஒன்பது

விடை : ஈ ) ஒன்பது 

5. எந்த நூற்றாண்டு முதல் நமக்குக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன?

அ) கி.மு. மூன்றாம் நூற்றாண்டு 

ஆ) கி.பி. ஏழாம் நூற்றாண்டு

இ) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு

ஈ) கி.பி. எட்டாம் நூற்றாண்டு

விடை : அ ) கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

6. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் யார்?

அ) தந்தை பெரியார்

(ஆ) வீரமாமுனிவர்

இ) தொல்காப்பியர்

ஈ) திருவள்ளுவர்

விடை : ஆ ) வீரமாமுனிவர்


7. தமிழகத்தில் கண்ணெழுத்துக்கள் எழுதப்பட்ட காலம் எது?

அ) முதல் சங்க காலம்

ஆ) இடைச்சங்க காலம்

இ) கடைச்சங்க காலம்

ஈ) சங்கம் மருவிய காலம்

விடை : இ ) கடைச்சங்க காலம்

8. 'ஆமா' என்னும் சொல் எதனைக் குறிக்கும்?

அ) ஆம்

(ஆ) காட்டுப்பசு

இ) ஆந்தை

 ஈ) அம்மா

விடை :  ஆ ) காட்டுப்பசு 

9. தலையை இடமாகக் கொண்ட எழுத்து எது?

அ) உயிர்

ஆ) மெய்

இ) உயிர்மெய்

ஈ) ஆய்தம்

விடை : ஈ ) ஆய்தம்

10. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் யாவை?

அ) ப், ம்

ஆ) க், ங்

இ) ற், ன்

ஈ) த், ந்

விடை :  அ ) ப் , ம் 


                                   பகுதி - ஆ

II. குறுவினா.

1. பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் போற்றிப் புகழ்ந்துள்ளார்?

பாரதிதாசன் புகழ்ந்த விதம் :
   
                1 ) சிந்துக்குத் தந்தை 

                2 ) செந்தமிழ்த் தேனீ 

                3 ) புதிய அறம்பாட வந்த அறிஞன் 

               4 ) மறம் பாட வந்த மறவன் 


2. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? அவை யாவை?

      *  அதிகாரங்கள் மூன்று 

அவை ,

     1 )  எழுத்து 

     2 ) சொல்

      3) பொருள்



3. உயிரளபெடை என்றால் என்ன?

உயிரளபெடை :

              உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்.


4. ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு இரண்டு தொடர்கள் எழுதுக. 

 *  தோட்டத்தில் ' ஆ ' புல் மேய்ந்தது.

 * ' தீ ' என்றால் நம் மனம் பதறும்.


5. வல்லின மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?

                     மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

6. சிங்கம், புலி, யானை, பசு இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.

        *  சிங்கம் - குருளை 

        *  புலி        -  பறழ் 

        *  யானை   -  கன்று 

        *  பசு           -   கன்று 

 
7. இருதிணை, ஐம்பால் - விரித்தெழுதுக.

இருதிணை - உயர்திணை  , அஃறிணை

ஐம்பால் 

     1 ) ஆண்பால் 

      2 )  பெண்பால்

         3 )  பலர்பால் 

              4 ) ஒன்றன்பால் 

                    5 ) பலவின்பால்

            பகுதி - இ 

III ) பெருவினா 

1 ) எழுத்துகளின் இடப்பிறப்பை விவரி.

எழுத்துகளின் இடப்பிறப்பு :

*  உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

* வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
* இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

*  ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.


2 ) தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழிகள் யாவை ?

தொல்காப்பியர் கூறும் ஓரெழுத்து ஒருமொழிகள் : 

     நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி என்பார் தொல்காப்பியர்.


       பகுதி  - ஈ 

IV . செயல்பாடு 

படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.

      *  இதழ் 
      *   நாக்கு 
      *  பல் 
      * மேல்வாய்

No comments:

Post a Comment