1. விலங்குகள் பலசெல் கொண்டவை.
2. பச்சைய நிறமி இல்லை. ஆனால், வேறுபட்ட நிறமிகளைக் கொண்டது.
3. உணர் உறுப்பு, நரம்பு மண்டலம் கொண்டவை.
4. செல் சுவர் இல்லை. ஆனால், செல்லைச் சூழ்ந்து செல் சவ்வு அல்லது பிளாஸ்மாலெம்மா காணப்படுகிறது.5. யூக்ளினாவைத் தவிர மற்ற விலங்குகளில் கணிகங்கள் இல்லை.
6. பெரும்பாலும் விலங்குகள் திட உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்ளும், உணவூட்ட முறை ஹோலோஸோயிக் ஆகும்.
7. சேமிப்பு உணவாக கிளைக்கோஜன் காணப்படும்.
8. பவளப்பூச்சிகள், கடற்பஞ்சு இவற்றைத் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உணவுக்காக இடம் விட்டு இடம் நகரும் தன்மையுடையவை.
9. யூரோட்ராபின் எனும் முக்கிய மருந்துப் பொருள் எந்த வினையின் போது கிடைக்கிறது - பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் குறுக்க வினைபுரியும்போது கிடைக்கிறது.
10. மதிப்புயர்ந்த கண்ணாடிப் பொருட்கள் எந்த வகை கண்ணாடியைச் சார்ந்தது - ஜீனாக் கண்ணாடி.
11. அசிட்டிக் அமிலத்தின் நீர்த்த நீர்க்கரைசல்களின் பெயர் - வினிகர்.
12. வினிகரில் எத்தனை சதவீதம் அசிட்டிக் அமிலம் இருக்கிறது - 6 - 10 சதவீதம்.
14. பெட்ரோல், டீசல், உற்பத்திவாயு, கரிவாயு, மரக்கரி போன்றவை - இரண்டாம் நிலை எரிபொருள்.
15. புரோப்பேன், பியூட்டேன், ஐசோ - பியூட்டேன், பியூட்டிலின் முதலிய ஹைட்ரோ கார்பன்களில் ஏதேனும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் கலந்துள்ள கலவைக்கு என்ன பெயர் - எல்.பி.ஜி.
16. குளோரோபார்ம், ஈதர்கள், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவை - மயக்கமூட்டிகளுக்கான எடுத்துக்காட்டுகள்.
17. மனநோயினை குணப்படுத்த பயன்படும் அமிலம் - பார்மிடியூரிக் அமிலம்.
18. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படும் மருந்து - பென்சிலின்.
- Sathish Kumar